காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 27, 2021, 02:16 PM IST
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! title=

சென்னை: தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  ஒருசில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும்:
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்:
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்:
தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சனிக்கிழமை வானிலை நிலவரம்:
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னை வானிலை நிலவரம்:
அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள் இன்று (27.10.2021) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டர்): 
தூத்துக்குடி, காயல்பட்டினம் (தூத்துக்குடி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 4, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கன்னிமார் (கன்னியாகுமரி) தலா 3, சூரலக்கோடு (கன்னியாகுமரி), சத்தியமங்கலம் (ஈரோடு), மண்டபம் (இராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), குமாரபாளையம் (நாமக்கல்), ஆழியாறு (கோவை) தலா  2, பெரியநாயக்கன்பாளையம் (கோவை), மேட்டுப்பாளையம் (கோவை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), குன்னூர்  (நீலகிரி), இளையங்குடி (சிவகங்கை), பூதபாண்டி (கன்னியாகுமரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சென்னை விமான நிலையம், ஊத்துக்குளி (திருப்பூர்), ஆர்எஸ்மங்கலம் (ராமநாதபுரம்), திருப்பூர் , சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பல்லடம் (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), தஞ்சாவூர், புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 1 சென்டிமீட்டர் பெய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News