பேரறிவாளன் விடுதலை பாஜகவின் மிகப் பெரிய சதி - மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சி சொலவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரஸ்க்கு இல்லை என விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 24, 2022, 12:23 PM IST
  • பேரறிவாளன் விடுதலை என்பது பாஜகவின் மிகப்பெரிய சதி
  • இந்த சதியில் சீமானும் ஒரு கதாப்பாத்திரம் - மாணிக்கம் தாகூர்
  • நாடாளுமன்றம் முன்பு அண்ணாமலை தீக்குளிக்க தயாரா?
பேரறிவாளன் விடுதலை பாஜகவின் மிகப் பெரிய சதி - மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு! title=

விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்ற உள்ளன. தேர்தல் வியூக வல்லுனர் பிரஷாந்த் கிஷோர் கூறுவது எல்லாம் மாற்றங்கள் இல்லை. அவர் பணத்திற்காக கட்சிகளுக்கு ஆலோசனை கூறும் நபர். எனவே, அவர் கருத்துக்களை ஏற்பதா? வேண்டாமா? என்பதை பணம் கொடுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யும். 

தமிழக பாஜகவில் 18 பேர் மட்டுமே உள்ளன. குறிப்பாக பாஜகவினரை விட அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகம். தமிழக அரசு 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அண்ணாமலை சீன் காட்டுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்ன விலைக்கு பெட்ரோல் - டீசல் விற்பனை செய்யப்பட்டதோ அதே அளவுக்கு மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும். இல்லை என்றால் 2014 விலை குறைப்பை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பாக அண்ணாமலை தீக்குளிப்பாரா? 

மேலும் படிக்க | திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம்! மெனுவில் பூரி, வடை, ஆம்லேட், உப்புமா

குஜராத் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது.  எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தால் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. 

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவைரை எப்போதும் ஒரே நிலைப்பாடு தான். அதேநேரம் பேரறிவாளனை தியாகியைப்போல் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயமாகும். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவித்து மற்ற அனைத்து கட்சிகளுக்கும் வெவ்வேறு நிலைப்பாடு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியும் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் திமுக சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை. இதேபோன்று காங்கிரஸ் கட்சி சொல்வதை திமுக ஏற்றுக்கொள்ளாது. குடும்ப அரசியல் பற்றி பேச கூடிய எந்த தகுதியும் பாஜகவிற்கு இல்லை. சீமான் பாஜகவின் 'பி' டீம் போன்று செயல்படுகிறார். பேரறிவாளன் விடுதலை என்பது பாஜகவின் மிகப்பெரிய சதி. அதில் முக்கிய கதாப்பாத்திரம் சீமான் தான். தமிழக மக்களால் சீமான் நிராகரிக்கப்படுவார்.'' இவ்வாறு மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கத் தயார்: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News