கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்கு கேட்டு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விருத்தாச்சலம் வானொலி திடலில் தேர்தல் பரப்புரை செய்தார்.
சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மேலும் வன்னியர் சங்க தலைவர் பு தா அருள்மொழி முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியது, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அம்மையார் மூன்று முறை பிரதமராக இருந்தார்கள், இப்பொழுது நம்முடைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர உள்ளார்கள். அவர் வருவதற்கு உங்களுடைய வெற்றி வேட்பாளருக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும், 400 தொகுதிகளுக்கு மேலே நிச்சயம் இந்த ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என சூலூரைத்தார்.
இம்மண்ணின் மைந்தருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த நோக்கம், காங்கிரஸ் அகற்றப்பட வேண்டும் எனவும், காங்கிரஸ் கொள்கைகள் மக்களுக்கு தேவையில்லாத கொள்கைகள் என்ற வகையில் தான், அந்த கட்சியை அண்ணா அவர்கள் ஆரம்பித்தார்கள். ஆனால் நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருந்து, ஒரு நல்ல வேட்பாளரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும், தங்கர்பச்சானை எதிர்த்து நிற்கின்ற வேட்பாளர் ஆரணி தொகுதியில், தனித்து நின்று டெபாசிட் இழந்தவர், சென்ற முறை திமுக வேட்பாளராக வெற்றி பெற்றவர் என்று கூறினார். அதே போல் கடலூர் மாவட்டத்தில் இருந்த திமுக எம்பி என்ன செய்தார், நான் இல்லை என்றால் அவர் செய்த கொலை வழக்கை, இல்லாமல் மூடி மறைத்து இருப்பார்கள் என்று கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அன்றிலிருந்து இன்று வரை கொள்கைக்காகவும், அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பாடுபட்டவர்கள் என்றும், தங்கர் பச்சான் இந்த மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்கு என்னென்ன தேவைகள், அந்த தேவைகளை எல்லாம் மிகத் துல்லியமாக திட்டமிட்டு அவர் செய்வார் என உறுதி அளித்தார்.
உங்களுடைய தொகுதி மக்களுடைய பிரச்சனைகளை, ஒரே நொடியில் தீர்த்து விடுவார் என்று நான் உறுதியாக சொல்ல மாட்டேன் அந்த பிரச்சனைகளை எல்லாம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வுகளை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் சொல்லி தீர்ப்பார் என்று உத்திரவாதம் அளித்தார்.
இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், மாநில மகளிர் சங்க செயலாளர்கள் டாக்டர் தமிழரசி, சிலம்பு செல்வி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருஞானம், மாவட்ட தலைவர் கருணாநிதி, மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர் வி பி ராஜ், நகர செயலாளர் முருகன், மணிமாறன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த கமல்! ஈரோட்டில் பின்பாயிண்ட் பேச்சு - பாஜக ரியாக்ஷன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ