தர்மபுரம் ஆதீனத்திற்கு ஆபாச பட மிரட்டல்... கைகோர்த்த பாஜக - திமுக பிரமுகர்கள், நடந்தது என்ன?

Dharmapuram Adheenam: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Feb 29, 2024, 07:42 AM IST
  • இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • 4 பேரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
  • மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரம் ஆதீனத்திற்கு ஆபாச பட மிரட்டல்... கைகோர்த்த பாஜக - திமுக பிரமுகர்கள், நடந்தது என்ன? title=

Mayiladuthurai Dharmapuram Adheenam: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. 

மடாதிபதியின் உதவியாளர் செந்தில், பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திமுகவின் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி புகார் அளித்திருந்தார். மேலும், இவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி அளித்துள்ள புகாரில், 'தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும் இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டுவிடுவோம். 

மேலும் படிக்க | அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி கொடுத்த உத்தரவு

அப்படி வெளியிடப்படாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து  கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்றும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆடுதுறை வினோத், திருவெண்காடு ரவுடி விக்னேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு,  உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், கைது செய்தவர்களை காவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (பிப். 28) ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 

இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக கைகோர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News