ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

ஏ பிளஸ் நிலை ரவுடி படப்பை குணாவுக்கு உதவி புரிந்த ஒரு பெண் ஆய்வாளர் உட்பட மூன்று ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 13, 2022, 07:00 PM IST
ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி title=

பிரபல ஏ பிளஸ் நிலை ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்தது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விவகாரத்தில்,  மூன்று காவல்துறை ஆய்வாளர்களை காவல்துறையின் தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

காஞ்சிபுரம் (Kancheepuram) மாவட்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேஷ்வரி, ஶ்ரீபெருமந்தூர் ஆய்வாளராக பணியாற்றிய ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளரான K.V.பாலாஜி ஆகிய  மூன்று காவல் ஆய்வாளர்களை தெற்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பல வித சிறப்பம்சங்களை தன்னகத்தே அடக்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நிர்வாகம், அரசாங்கம் என யாரிடமும் எந்த வித அச்சமும் இல்லாமல் ரவுடிகள் தங்கள் இஷ்டப்படி இருந்து வருகிறார்கள். பொது மக்கள், வணிகர்கள் என யாரையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. 

இந்த நிலையில், சென்னை புறநகர் மாவட்டங்களாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக, காவல் துறை வட்டாரங்களில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

படப்பை குணாவிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்த காவலர்கள் (TN Police), ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் விரைவில் ஏடிஜிபி வெள்ளத்துரை அவர்களின் வளையத்துக்குள் சிக்குவார்கள் என காவல் துறையினர் மத்தியில் பலமாக பேச்சு அடிபடுவதால், பல காவல் அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ | கொலையில் முடிந்த தகராறு.. அண்ணனை வெட்டிய தம்பி..!

ALSO READ | Vaikunta Ekadasi 2022: சொர்க்கவாசல் திறந்தன! வைணவ ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்... 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News