பிரதமர் மோடியின் சீன பயணம் மூலம் எதிர்காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் என சென்னையில் சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே 73 நாட்களாக நீடித்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சீனா பயணத்தை மேற்கொண்டார். அங்கு வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களா கையெழுத்தாகியது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியின் சீன பயணம் மூலம் எதிர்காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும். மேலும், சீனாவில் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக மனித வளம் குறைந்து இயந்திரங்கள் அதிகமாகியுள்ளன எனவும் தெரிவித்தள்ளார்.