ராமநாதபுரத்தில் கன மழை: 121.8 மி.மீ, 83 ஆண்டு கால Record Break!!

தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 10, 2020, 10:52 AM IST
  • ஆகஸ்ட் 9 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் நகரில் 121.8 மிமீ மழை பெய்தது.
  • ஆகஸ்டில் இங்கு இதுவரை பெய்துள்ள அதிகபட்ச மழையின் அளவு 103.6 மிமீ ஆகும்.
  • ஆகஸ்டில் பாம்பனில் பெய்யும் சராசரி மழையின் அளவு வெறும் 15 மி.மீ.
ராமநாதபுரத்தில் கன மழை: 121.8 மி.மீ, 83 ஆண்டு கால Record Break!!

தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

வானிலை பற்றிய தகவல்களைத் தன் பிளாக்கில் அவ்வப்பொது வெளியிட்டுக்கொண்டிருக்கும் பிரதீப் ஜானின் படி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் (Pamban) நகரில் 121.8 மிமீ மழை பெய்தது. இது 24 மணி நேரத்தில் அதிக மழைக்கான பதிவுகளையும், அதிக மாதாந்திர மழைக்கான பதிவுகளையும் முறியடித்துள்ளது. இதற்கு முன்னர், ஆகஸ்ட் 31, 1937- இல் பாம்பனில் 73.9 மிமீ மழை பெய்தது. ஆகஸ்டில் இங்கு இதுவரை பெய்துள்ள அதிகபட்ச மழையின் அளவு 103.6 மிமீ ஆகும். இது 1910 இல் பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரத்தில் (Ramanathapuram) உள்ள பாம்பன் பகுதி தென்மேற்கு பருவமழையின் போதும் இந்தியாவின் வறண்ட பகுதிகளில் ஒன்றாக இருக்கும். ஆகஸ்டில் பாம்பனில் பெய்யும் சராசரி மழையின் அளவு வெறும் 15 மி.மீ. ஆகும். தூத்துக்குடியுடன் சேர்த்து இந்த பெல்ட் தென்மேற்கு பருவமழையின் போது முழு நாட்டிலும் வறண்ட பகுதியாக இருக்கும். தென்மேற்கு பருவமழையின் போது, ​​பல காரணங்களால் இப்பகுதிகளில் அதிக மழை இருப்பதில்லை.” என்று ஜான் கூறினார்.

ALSO READ: கேரளாவின் இடுக்கியில் நிலச்சரிவு: 5 பேர் பலி, பல தேயிலைத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்!!

இதற்கிடையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நல்ல மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 61.7 மி.மீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 15.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை முறையே 30.2 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் ஆகும். பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 23.6 மற்றும் 24.6 டிகிரி செல்சியஸ் ஆகும்.

பல்வேறு மாவட்டங்களைப் பொறுத்த வரை, நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், வேலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிக மழை பெய்தது. சென்னையின் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறுகையில், “இந்த மழை நகரம் முழுவதும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தொடரும். அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ” என்று கூறினார்.

ALSO READ: மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை, ரெட் அலர்ட் வழங்கியது IMD

More Stories

Trending News