சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து குளுமையாக்கியுள்ளது. கோடை காலம் முடிந்த நிலையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது.
வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. அதேபோல், பூந்தமல்லி,மதுரவாயல், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.
மக்களுக்கு ஆறுதலாக குளுமை ஏற்படுத்தியுள்ளது நேற்று பெய்த மழை.