தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்-ராஜேஷ் லக்கானி

Last Updated : May 16, 2016, 10:41 AM IST
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்-ராஜேஷ் லக்கானி

தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவித வாக்கினைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று முதல் ஆளாக தனது வாக்கைப்பதிவு செய்தார் மக்கள் அனைவரும் தங்கள் வாக்கினை பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்களிப்பது அனைவரின் கடமை என்றார். மக்களுக்கு எந்த வித இடையூருகள் இல்லாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளன. இன்று காலை முதலே தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு துறைச்சார்ந்த பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர்.
 
மக்களை தேர்தலில் வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தது. இந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த தேர்தலில் வாக்களிக் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

More Stories

Trending News