கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு....

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்...

Last Updated : Dec 15, 2018, 03:22 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு.... title=

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்...

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிலை திறப்பு விழாவிற்கு சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-க்கு எதிரான கட்சிகள் இந்த விழாவை முன்வைத்து சந்திக்க உள்ளன. 

திமுகவும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை மாபெரும் விழாவாக நடத்த வேண்டும் என பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த விழா குறித்து திமுக ட்விட்டர் பக்கத்தில், "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், கழக தலைவர் @mkstalin அவர்கள் உருவாக்கியுள்ள திருவுருவச்சிலை திறப்புவிழா!

தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும் விழாவை முன்னிட்டு சென்னை - அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளின் பேரொளியில் மிளிர்கிறது!" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை திறந்து வைக்கிறார். சோனியா காந்தியுடன், ராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News