பழங்குடி இனத்தவர் உயிரிழப்பு... விதி இருந்தும் கொடுக்கவில்லை; அதனால்தான் இந்தத் தற்கொலை - ராமதாஸ் காட்டம்

விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவதுதான் தற்கொலைகளுக்கு காரணமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 13, 2022, 06:34 PM IST
  • பழங்குடியினத்தை சேர்ந்தவர் தற்கொலை
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளிப்பு
  • சாதி சான்றிதழ் கிடைக்காததால் தற்கொலை
பழங்குடி இனத்தவர் உயிரிழப்பு... விதி இருந்தும் கொடுக்கவில்லை; அதனால்தான் இந்தத் தற்கொலை - ராமதாஸ் காட்டம் title=

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. வேல்முருகனுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு சாதி சான்றிதழ் பெற வேல்முருகன் தொடர்ந்து முயற்சித்ததாகவும் ஆனால் அது அவருக்கு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே,அவர் சார்ந்த சமூகத்திற்கு தமிழகம் முழுவதும் சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கப்பெறாமல் இருந்தது.

இந்தச் சூழலில்  சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் நேற்று முன் தினம் (அக் 11) மதியம் தீக்குளித்தார் வேல்முருகன். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பான் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

அவரது இந்த தற்கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கொண்டாரெட்டி, மலைக்குறவர்  ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12,23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும்.

 

பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | சாதி சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News