ஆர்.கே. நகரில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். ஜெ., அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். திமுக சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ப.மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய ஓபிஎஸ் அணி வீட்டில் மதுசூதனன் தலைமையில் ஆட்சிமன்ற குழு கூடி ஆலோசனை நடைபெற்றது. ஆர்.கே. நகரில் ஓபிஎஸ் அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு இ.மதுசூதனன் அவர்கள். #RKNagarByPoll
— O Panneerselvam (@OfficeOfOPS) March 16, 2017