சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பதில் வீட்டின் முன்கதவு சாவியை கோதுமை மாவு மூலமாக அலுமினிய வார்ப்பு செய்து அச்சு எடுத்து டூப்ளிகேட் சாவியை தயாரித்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட ஏசி மெக்கானிக் சந்திர சுதன் (வயது 32) என்பவரை கைது செய்து திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் பறிமுதல் செய்து கொள்ளை அடிக்கப்பட்ட 52 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர்.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் 7 வது தெருவில் வீடு ஒன்றில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலாஜி இவர் கட்டிடம் கட்டும் ஒப்பந்த தாரராக வேலை செய்து வருகிறார். இரண்டாவது தளத்தில் சந்திரசுதன் என்பவர் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். இந்தநிலையில் பாலாஜி தனது மனைவி வாசுகிதேவியுடன் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து மனைவி உடை எடுக்க பீரோவை திறந்த போது பீரோவில் வைத்திருந்த நகை பேட்டி திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கணவரிடம் தெரிவிக்க பாலாஜி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேல்வீட்டில் உள்ள நபர் மீது சந்தேகம் உள்ளது என பாலாஜி தெரிவித்ததையடுத்த சந்தேகத்தின் பேரில் இரண்டாவது தளத்தில் வசித்துவந்த சந்திர சுதனை பிடித்து விசாரணை நள்ளிரவு 2 மணிக்கு பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்கவும்: போலீஸ் வேலையில் இறங்கிய விஜய் ரசிகர்கள்; நிஜ போலீஸை கண்டதும் ஓட்டம்
விசாரணையில் ஏசி மெக்கானிக்காக வேலைபார்த்து வந்த சந்திர சுதன் நகை திருடியது உறுதியானது. அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை கீழ் தளத்தில் உள்ள பாலாஜி பாரிமுனையில் உள்ள கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்த களைப்பில் அப்பொழுது மறதியாக வீட்டின் சாவியை கதவிலயே விட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.
இதனை சாதகமாக்கி கொண்ட சந்திர சுதன் கதவிலிருந்த சாவியை எடுத்து சென்று கோதுமையில் அச்சு உருவாக்கி தன்னிடம் இருந்த சால்டரிங் ஈயங்களை உருக்கி அச்சு அசலாக போலியாக சாவியை தயாரித்து வைத்து கொண்டு, அதனை வைத்து நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை திறந்து பீரோவினை லாவகமாக திறந்து பெட்டியில் வைத்திருந்த தங்கம் வைரம் நகைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளியை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர் .மேலும் வீட்டின் சாவி கோதுமையில் அச்சு தயாரித்து 52 சவரன் நகை பணம் ஆகியவற்றை திருடிய சம்பவம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் பெரும் அச்சத்தை பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்: "உல்லாச விருந்து" மயங்கிய அரசியல் தலைவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR