தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 6 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2021, 08:36 AM IST
தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப்பொருள் பறிமுதல் title=

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார் இன்று மாலை தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் உள்ள ஒரு பூங்கா முன்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு 3 வாலிபர்கள் கையில் ஜவுளிக்கடை பையுடன் சந்தேகத்தின் பேரில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து பையை சோதனை செய்ததில் ஒரு குக்கருக்குள் இரண்டு பாக்கெட்டுகளில் அபின் என்ற போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பாக்கெட்களில் 162 கிராம் இருந்தது.

ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது

இதை தொடர்ந்து 3பேரையும் மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி டவுன் போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு சம்பத் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில், இவர்கள் தூத்துக்குடி அண்ணா நகர் 5வது தெருவை  சேர்ந்த மைதீன் மகன் அன்சார்அலி வயது 26, யோகீஸ்வரர் காலனியை சேர்ந்த முனியசாமி மகன் மாரிமுத்து வயது 26, டூவிபுரம் 1வது தெரு சேர்ந்த ஷாஜகான் மகன் இம்ரான்கான் வயது 27, என்பது தெரியவந்தது.

மேலும், இதை தொடர்ந்து இம்ரான் கான் என்பவர் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி விசாரணை  நடத்தினார்கள். விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் ரோஸ் நகரிலுள்ள சவரிமுத்து மகன் அந்தோணி முத்து வயது 42, என்பவர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்த மூன்று பாக்கெட்டுகளில் சுமார் 20 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தோணி முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பட்டணம் மருதூர் வடக்கு தெருவை சேர்ந்த சௌகத் அலி மகன் கசாலி வயது 27, தருவைகுளம் நவமணி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரேம் வயது 40, ஆகியோர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 21 கிலோ போதைப்பொருள் மதிப்பு சர்வதேச அளவில் ரூ 21 கோடி ஆகும். இந்த போதைப் பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எங்கு கொண்டு செல்கிறார்கள்? வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடல் வழியாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பிடிபட்ட 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடியில் 21 கிலோ போதைப்பொருள் பிடிபட்ட விவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News