காலி பாத்திரம் அண்ணாமலை ரூ.2500 கோடிக்கு பினாமி - கொளுத்தி போட்ட ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை ஒரு காலி பாத்திரம் என விமர்சித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவர் 2,500 கோடி ரூபாய்க்கு பினாமி என நான் கூட சொல்வேன் என தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 27, 2023, 05:39 PM IST
  • அண்ணாமலை ஒரு காலி பாத்திரம்
  • மணிப்பூர் விஷயத்தை திசை திருப்புகிறார்
  • 2500 கோடிக்கு பினாமி என்று கூட சொல்லலாம்
காலி பாத்திரம் அண்ணாமலை ரூ.2500 கோடிக்கு பினாமி - கொளுத்தி போட்ட ஆர்.எஸ்.பாரதி title=

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  "மணிப்பூர் பிரச்சனை நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பவே அண்ணாமலை தற்போது தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் என்கிற பெயரில் ஆளுநரை சந்தித்து வழங்கியுள்ளார். Specific charge எதாவது அண்ணாமலை சொல்லி இருக்கிறாரா?. அப்படி எதுவும் இல்லை. அவர் என்ன புகார் கொடுத்தார் என யாருக்கும் தெரியாது.

மேலும் படிக்க | முதலமைச்சர் எழுதிக்கொடுப்பதை பேசுகிறார்... இது அழகல்ல - அண்ணாமலை

திசை திருப்புவதற்காக தான் அண்ணாமலை இது போன்ற புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். முகாந்திரம் இல்லாத அவர் புகாரை எப்படி ஏற்றுக்கொள்வது. எதையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயார். திமுகவினர் மீது போட்ட அனைத்து வழக்கையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறோம். 2500 கோடிக்கு பினாமி அண்ணாமலை என்று நான் கூட சொல்லலாம். ஆனால் அதனை நாம் நிரூபிக்க வேண்டும்.

மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே அண்ணாமலை இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார். ED ரைடே நியாயாமா இல்லையா என்று சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்படுகிறது?. எனவே நல்ல தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும். அண்ணாமலை ஒரு empty vessel. அதாவது காலி பாத்திரம். இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை என்பார்களே தவிர? கண்டிப்பாக இதனால் திமுகவிற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது.

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபம் - பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News