பிரசர் ஏற்ப்படுத்திய குக்கர் சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2019, 09:45 AM IST
பிரசர் ஏற்ப்படுத்திய குக்கர் சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு title=

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகருக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக-வில் இருந்து பிரிந்தது சென்ற டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுக, திமுக கட்சிகளை பின்னுக்கு தள்ளி அபாரமாக வெற்றி பெற்றா. தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலில் வெற்றி பெற்று தந்த குக்கர் சின்னத்தை, தங்களுக்கு நிரந்தரமாக வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் சனவரி 2 ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சனவரி 17 மற்றும் 18 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். 

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தினகரனுக்கு குக்கர் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது இன்று தெரிந்துவிடும்.

Trending News