கடலூரில் கள்ளக்காதல் விபரீதம் ; இரண்டாவது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

கடலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டாவது மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ளார். தலைமறைவாக இருக்கும் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2024, 11:08 AM IST
  • கடலூரில் இரண்டாவது மனைவி கொலை
  • கள்ளக்காதல் விவகாரத்தில் வெறிச்செயல்
  • தலைமறைவான கணவரை தேடும் போலீஸ்
கடலூரில் கள்ளக்காதல் விபரீதம் ; இரண்டாவது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் title=

கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி (35). ரமேஷ் இந்துமதியின் தங்கையான சூர்யா (33) என்பவரையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சூர்யா கடலூர் முதுநகரில் வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை ரமேஷ் கண்டித்த நிலையிலும் சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. 

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

இதன் பிறகு ரமேஷ் சொந்த ஊருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்த போது உறவினர்களும்,குடும்பத்தாரும் சமாதானம் பேசி சூர்யாவை ரமேஷ் உடன் ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சூர்யாவுக்கும் ரமேஷுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து, கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு விசாரணை மேற்கொண்டார். மேலும் தப்பியோடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News