தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி, ஏப். 3ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், 1-9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத்தேர்வுகள் நிறைவுற்று, இன்று முதல் கோடை விடுமுறை விடுக்கப்பட்டது.
கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் தங்கள் சொந்த ஊருக்கும், சுற்றுலா பயணத்திற்கும் சென்றிருப்பார்கள். ஆனால், விருதுநகர் அருகே 12ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரண்டு மாணவர்கள் கோடை விடுமுறையை ஒட்டி, கட்டட வேலைக்கு சென்று தற்போது உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசு கல்லூரியில் கட்டட வேலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டடப் பணிக்கு புளியங்குளத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு தேர்வு எழுதி, கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்த ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!
அப்போது முதல் தளத்தில் பணிகள் முடிந்ததால் இரண்டாவது தளத்திற்கு பொருட்களை இடமாற்றும் பணி நடந்துள்ளது. அப்போது, தற்காலிக மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்ததாகவும், அதை மாணவர்கள் ஹரிஷ் குமார் மற்றும் ரவிச்செல்வம் இருவரும் சேர்ந்து தூக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இந்த இரண்டு மாணவர்களும் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறையில் வேலைக்குச் சென்ற பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு வெளியாக இருந்த நிலையில், அத்தேர்வு மே 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க | மனைவி மீது ஆசிட் வீச்சு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ