திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் நடைபெற்ற கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தாராபுரம் வழியாக திருப்பூர் புறப்பட்டு வரும் வழியில் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக 8 பேர் சென்று நீரில் மூழ்கி உள்ளனர். அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து சென்ற தாராபுரம் தீயணைப்புத் துறையினர் சரண், ஜீவா என்ற இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த அமிர்தகிருஷ்ணன், சக்கரவர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் ஆகிய 6 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான 6 பேரின் சடலங்களை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆறுதல் கூறியதோடு விரைவாக பிரேத பரிசோதனை செய்யவும் முதல்வரின் நிவாரணத்திற்கான பணிகளையும் முடுக்கிவிட்டார்.
ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR