சென்னை - நெல்லை இடையே கோடை சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

கோடையில் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதனை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 9, 2024, 01:31 PM IST
  • அனைத்து ரயில்வே மண்டலங்களும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன.
  • தெற்கு ரயில்வே நெல்லைக்கான சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
  • நீண்ட தூரப் பயணங்களுக்கு பொதுவாக மக்கள் அதிகம் விரும்பக்கூடிய பொதுப் போக்குவரத்து ரயில்.
சென்னை - நெல்லை இடையே கோடை சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! title=

கோடைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என மக்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிடத் தொடங்குவார்கள் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இதிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையை கொண்டாடவும் வெளியூர் பயணங்களுக்கும் திட்டமிடுவர். நீண்ட தூரப் பயணங்களுக்கு பொதுவாக மக்கள் அதிகம் விரும்பக்கூடிய பொதுப் போக்குவரத்து என்றால், அது ரயில்கள் தான். 

கோடையில் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதனை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களும் (Indian Railway) சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன.  அந்த வகையில் தெற்கு ரயில்வே நெல்லைக்கான சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

கோடைக்கால விடுமுறையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே, அறிவித்துள்ளது. ரயில்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், இதனை தவிர்க்கும் பொருட்டும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு உதவி செய்து வருகிறார் - டிடிவி தினகரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News