தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்..!
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election) நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் (Election campaign) செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக AIADMK மற்றும் DMK இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா (Sasikala) கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் (Tamil Nadu) திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
ALSO READ | சசிகலாவின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: காரணம் சட்டமா? சதியா?
இந்நிலையில் திமுக தலைவர் MK. ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் கானை பகுதியில் இன்று தனது மூன்றாம் கட்ட பிரசார பயணத்தை மேற்கொண்டார். மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் (MK. Stalin), திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்வி கடன் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். டெண்டர் விடுவதில் ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அரசு (TN Govt) அக்கறை செலுத்துகிறது என்ற விமர்சனம் செய்துள்ளார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR