சென்னை: தமிழகத்தின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தொடரில் அனைத்து கொரோனா நெறிமுறைகளும் பின்பற்றப்படு முன்னெச்சரிகை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் (TN Assembly Session) கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக (DMK) தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக, சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
ALSO READ: Shiva Shankar Baba: 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா
சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், மரபுப்படி, பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்தார். ஆளுநரை சந்தித்த பிறகு அப்பாவு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்.
மரபுப்படி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுக்க அவரை சந்தித்ததாக அப்பாவு தெரிவித்தார். அவர் கண்டிப்பாக வருவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார் சபாநாயகர் அப்பாவு. சட்டமன்ற கூட்டத்தொடரில் எந்த வித விருப்ப வெறுப்பும் இல்லாமல் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படும் என தெரிவித்தார் அப்பாவு (M Appavu).
மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அப்படி செய்யப்பட்டால், அது மக்களுக்கு ஒரு பெரிய நன்மையை அளிக்கும். சட்டமன்ற விவாதங்கள், கலந்துரையாடல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள மக்களிடம் எப்போதும் ஆர்வம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்வுகளை நேரலையில் காண முடிந்தால், அது கண்டிப்பாக மக்களின் ஆர்வத்தையும் நாட்டு நடப்பு பற்றிய அறிவாற்றலையும் அதிகரிக்கும்.
ALSO READ: பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR