பிரம்மாண்டமாக நடைபெற்றது இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்; முதல்வர் நேரில் வாழ்த்து

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 27, 2021, 03:51 PM IST
பிரம்மாண்டமாக நடைபெற்றது இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்; முதல்வர் நேரில் வாழ்த்து

இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் இன்று மாமல்லபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

ALSO READ | Lyca Productions: இயக்குநர் ஷங்கர் திரைப்படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு (Director Shankar) இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகன் உள்ளார். அதில் டாக்டராக உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றது. சரியாக காலை 11.15க்கு மணமகன் ரோகித், மணமகள் ஐஸ்வர்யா கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார்.

 

 

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் இந்த திருமணம் நடைபெற்றது. ஊடரங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும், அதில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் இயக்குனர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News