சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 18,023 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,74,704 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 409 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளது.
Tamil Nadu reports 18,023 new #COVID19 cases, 31,045 recoveries and 409 deaths in the last 24 hours.
Total cases 22,74,704
Total recoveries 20,28,344
Death toll 27,765Active cases 2,18,595 pic.twitter.com/JZ8LuUyD6C
— ANI (@ANI) June 8, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 259 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 150 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 27,765-ஐ எட்டியுள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 31,045 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 20,28,344 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,18,595 ஆக உள்ளது.
இன்று மொத்தமாக 1,70,112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 18,023 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9,992 ஆண்களும் 8,031 பெண்களும் அடங்குவர்.
ALSO READ: 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்ட தமிழக அரசு -முழுவிவரம்
இது தவிர தவிர அரியலூரில் 145 பேரும், செங்கல்பட்டில் 773, கோயம்பத்தூறில் 2439, கடலூரில் 463, தர்மபுரியில் 240, திண்டுக்கல்லில் 199, ஈரொட்டில் 1596, கள்ளக்குறிச்சியில் 270, காஞ்சிபுரத்தில் 279, கன்னியாகுமரியில் 587, கரூரில் 195, கிருஷ்ணகிரியில் 275, மதுரையில் 365, நாகப்பட்டினத்தில் 446, நாமக்கல்லில் 525, நீலகிரியில் 498, பெரம்பலூரில் 115, புதுக்கோட்டையில் 193, ராமநாதபுரத்தில் 107, ராணிப்பேட்டையில் 335, சேலத்தில் 975, சிவகங்கையில் 138, தென்காசியில் 198, தஞ்சாவுரில் 770, தேனியில் 256, திருப்பத்தூரில் 227, திருவள்ளூரில் 407, திருவண்ணாமலையில் 334, திருவாரூரில் 324, தூத்துக்குடியில் 281, திருநெல்வேலியில் 185, திருப்பூரில் 995, திருச்சியில் 490, வேலூரில் 277, விழுப்புரத்தில் 443, விருதுநகரில் 341 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18 நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 19,000-க்கும் கீழ் வந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய தமிழக முதல்வர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) திருவாரூர் செல்கிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் அலை தீயாய் பரவத் தொடங்கிய நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதலே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ALSO READ: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR