TN District Wise Covid update ஆகஸ்ட் 13: இன்றைய கோவிட் பாதிப்பு மாவட்ட வாரியாக!

 தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் இன்று 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 13, 2021, 07:24 PM IST
TN District Wise Covid update ஆகஸ்ட் 13:  இன்றைய கோவிட் பாதிப்பு மாவட்ட வாரியாக!   title=

சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் இன்று 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,462 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,411 ஆக உள்ளது.

சென்னையில் இன்று 243 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களில் தினசரி புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு-188ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read | TN Corona Update: தமிழகத்தில் இன்று 1933 பேருக்கு தொற்று பாதிப்பு, 34 பேர் உயிர் இழப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 236 பேருக்கும், அதனையடுத்து சென்னையில் 211 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

கோயம்புத்தூர் - 236
சென்னை - 211
ஈரோடு - 177
சேலம் - 120
தஞ்சாவூர் - 114

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 16
செங்கல்பட்டு 108
சென்னை 211
கோவை 236
கடலூர் 72
தர்மபுரி 23
திண்டுக்கல் 9
ஈரோடு 177
கள்ளக்குறிச்சி 32
காஞ்சிபுரம் 32
கன்னியாகுமரி 32
கரூர் 14
கிருஷ்ணகிரி 22
மதுரை 22
மயிலாடுதுறை 19
நாகப்பட்டினம் 31
நாமக்கல் 47
நீலகிரி 48
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 36
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 17
சேலம் 120
சிவகங்கை 15
தென்காசி 8
தஞ்சாவூர் 114
தேனி 11
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 75
திருவண்ணாமலை 43
திருவாரூர் 38
தூத்துக்குடி 11
திருநெல்வேலி 15
திருப்பூர் 105
திருச்சி 77
வேலூர் 41
விழுப்புரம் 32
விருதுநகர் 6

Also Read | கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News