கோயம்புத்தூர்: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் மும்முரமடைந்துவிட்டன. காங்கிரஸ் (Congress) கட்சிக்கு வலு சேர்ப்பதற்காக களம் இறங்கிவிட்டார் ராகுல் காந்சதி.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று திருப்பூரில் (Tiruppur) தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அருகில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
#WATCH | Congress leader Rahul Gandhi was received by party workers and supporters at Anupparpalayam in Tiruppur, Tamil Nadu earlier today. pic.twitter.com/89zuXbCtFb
— ANI (@ANI) January 23, 2021
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியின் (Rahul Gandhi) வரவையொட்டி, அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டிருந்தன. பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, தமிழகம் எனது ரத்த உறவு என்று உருக்கமாக பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருப்பூரில் தேர்தல் பிரசாரத்திற்கு வருவதற்கு முன்னதாக கோயம்புத்தூரில் (Coimbatore)சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார்.
இப்போது தமிழகத்தில் (Tamil Nadu) அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை மும்முரமாக்கிவிட்டன. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தேர்தல் பிரசாரம் தான் என்பதால், கொரோனா பாதிப்பு இருந்தாலும், பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.
Also Read | சசிகலாவுக்கு மட்டுமல்ல, இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR