மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது; மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு என முதல்வரே கூறியுள்ளார்!!
தமிழகத்தின் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் போராட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 67 இடங்களில் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை காவிரி படுகையில் எடுக்க மாட்டோம் என நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்த நிலையில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில்,சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்; மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே அரசு ஆதரவு என முதல்வரே கூறியுள்ளார் என தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறியுள்ளார்.
மேலும், டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம். தனி மரம் தோப்பாகாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.