மாநிலம் முழுவதும் வட மாநிலத்தவர்கள் கணக்கெடுப்பை தொடங்கிய தமிழக அரசு

மாநிலம் முழுவதும் வட மாநிலத்தவர் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 13, 2023, 01:00 PM IST
மாநிலம் முழுவதும் வட மாநிலத்தவர்கள் கணக்கெடுப்பை தொடங்கிய தமிழக அரசு title=

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வட மாநிலத்தவர்கள் குறித்த கேள்வியை எழுப்பினார். அவர் பேசும்போது, வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். 

மேலும் படிக்க |  தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டத்தை திருத்தியது தமிழக அரசு

இதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 25 கொலை வழக்கு, 24 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்..

மேலும், தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும், தகவல் சேகரித்து வருவதாக கூறினார். அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மனித வள அதிகாரிகள் மூலம் தகவல்கள் பெறப்படுகிறது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்தேகப்படும் நபர்கள் குறித்து அந்தந்த மாநிலங்களின் காவல்துறை மூலம் தகவல்கள் பெறப்படுகிறது என்றார். மேலும், குற்றச்சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்த ஆட்சியில் புதிய வரலாறு - மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News