இலங்கைவாழ் தமிழர்கள் குறித்த ஜெய்ஷங்கரின் கருத்தை வரவேற்கிறேன்: Banwarilal Purohit

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கும் உறுதிக்கும் அவர் காட்டும் அக்கறைக்கும் ஜெய்சங்கரின் அறிக்கை ஒத்திசைக்கும் வகையில் உள்ளது என்று ஆளுநர் மேலும் கூறினார்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 7, 2021, 04:16 PM IST
  • எஸ்.ஜெய்சங்கரின் கருத்துக்களை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வரவேற்றார்.
  • அவரது வார்த்தைகள் தமிழக மக்களால் வரவேற்கப்படுவது உறுதி-பன்வாரி லால் புரோஹித்.
  • எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கை சுற்றுப்பயணத்தை மெற்கொண்டுள்ளார்.
இலங்கைவாழ் தமிழர்கள் குறித்த ஜெய்ஷங்கரின் கருத்தை வரவேற்கிறேன்: Banwarilal Purohit

சென்னை: தமிழ் சமூகம் தொடர்பாக புதன்கிழமை கொழும்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறிய கருத்துக்களை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வரவேற்றார்.

"நாங்கள் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதால், இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா மிகுதியான அர்ப்பணிக்கைக் கொண்டுள்ளது" என்று புரோஹித் ஒரு ராஜ் பவன் வெளியீட்டில் தெரிவித்தார்.

இலங்கையில் (Sri Lanka) நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவு நீண்டகாலமாக உள்ளது என்று அவர் கூறினார். இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளான சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவை நிறைவேற்றப்படுவது தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் நன்மை பயக்கும்” என்று தெரிவித்தார்.

"இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் செய்துள்ள கடமைகளுக்கு சமமாக பொருந்தும்" என்றும் அவர் கூறினார். "இலங்கையின் முன்னேற்றமும் செழிப்பும் நிச்சயமாக இதன் விளைவாக முன்னேறும்" என்று அவர் விளக்கினார்.

இது ஒரு முக்கியமான அறிக்கை என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். இது இலங்கையில் உள்ள தமிழ் சகோதர சகோதரிகள் மீது இந்திய அரசாங்கத்தின் அக்கறையை குறிக்கிறது என்றும் திரு.பன்வாரி லால் (Banwarilal Purohit) எடுத்துக்காட்டினார்.

13 ஆவது திருத்தம் தொடர்பாக நாட்டின் நிலைப்பாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெஷங்கர் (S.Jaishankar) சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டிய புரோஹித், “அவரது வார்த்தைகள் தமிழக மக்களால் வரவேற்கப்படுவது உறுதி” என்றார்.

ALSO READ: அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் அளிக்கப்படும்: தமிழக அரசு

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கொண்டிருக்கும் உறுதிக்கும் அவர் காட்டும் அக்கறைக்கும் ஜெய்சங்கரின் அறிக்கை ஒத்திசைக்கும் வகையில் உள்ளது என்று ஆளுநர் மேலும் கூறினார்.

முன்னதாக இவ்வாண்டின் முதல் வெளிநாட்டு அரசியல் பயணமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்கு சென்றார். அங்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை (Gotabaya Rajapaksa) சந்தித்த ஜெய்ஷங்கர், இலங்கையில் இருக்கும் தமிழர்கள் குறித்து பேச்சுவார்தை நடத்தினார். பிராந்தியத்தின் நலனில் அக்கறை காட்டும் இந்தியா, இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் இலங்கையின் ஒன்றுபட்ட செயல்பாட்டில் ஆதரவாக இருந்து உதவும் என்று அவர் கூறினார்.

ALSO READ: எந்த நொடியிலும் போருக்கு தயாராக இருங்கள்: சீன இராணுவத்திற்கு உத்தரவிட்ட Xi Jinping

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News