தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 79,804 பேர் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 54 பேர் மற்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 9 பேர், பீகாரில் இருந்து வந்த ஐந்து பேர், ஜார்க்கண்டில் இருந்து நான்கு பேர், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தலா மூன்று பேர், கேரளா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தலா இரண்டு பேர், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒருவர், என்ற அளவில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
மறுபுறம், 6,250 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 9,20,369 ஆக எடுத்துக் கொண்டனர்.
ALSO READ | Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்
மேலும் நாற்பத்தெட்டு பேர் தொற்றுநோயால் இறந்ததை அடுத்து, மாநிலத்தின் கொரோனா (Corona) இறப்பு எண்ணிக்கை 13,205 ஆகக் உயர்ந்துள்ளது.
சென்னையில், 3,711 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 1,967 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 17 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 28,005 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கான சிகிச்சையில் உள்ளனர்.
இன்றுவரை, சென்னையின் 2,90,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 2,57,927 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுநோயால் இதுவரை 4,432 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்டை மாவட்டங்களிலும் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன - செங்கல்பட்டில், 1,029 புதிய தொற்று பாதிப்புகளும் மூன்று இறப்புகளும் பதிவாகியுள்ளன. திருவள்ளூரில், 508 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐந்து பேர் இறந்து விட்டனர், மேலும் காஞ்சீபுரத்தில் 295 பேருக்கு, புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கே மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.
ALSO READ | கொரோனா இரண்டாவது அலை எதிரொலி; பிரதமர் மோடி, மம்தா பிரச்சார உத்தியில் மாற்றம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR