சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: அப்டேட் கொடுத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது: மா.சுப்பிரமணியன்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2023, 03:05 PM IST
  • இன்புளுயென்சா காய்ச்சலுக்கான தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் போடும் பணி விரைவில் துவங்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி
  • வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கே அதிகம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது - சுகாதாரத்துறை அமைச்சர்.
  • தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர்.
சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: அப்டேட் கொடுத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் title=

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஒமிக்ரான் வகையிலான XBB வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தாலும், அச்சப்பட தேவையில்லை என்றும் பாதுகாப்பான சூழல் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறியுள்ளர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அலுவலகத்தில் கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர், ‘ஒன்றிய அரசின் அறிவுத்தல்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பே இல்லாத நிலை இருந்த சூழல் இருந்தது, உயிரிழப்பு இல்லாத நிலை இருந்தது. தற்போது உருமாற்றம் கொண்ட கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்தியாவில் 200க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு 1000 த்தை கடந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை சோதித்ததில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே H3N2 என்ற வைரஸ் பாதிப்பு இருந்தது. முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப 1586 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 

கடந்த 10 நாட்களில் 23833 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் மூலம் 10 லட்சத்து 41 ஆயிரம் பேர் பங்கேற்றதில் 7500 பேர் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. h3N2 வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் முடிவுக்கு வந்துள்ளது, தற்போது 15 பேர் மட்டுமே பாதித்துள்ளனர். 

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகளை உறுதிப்படுத்திகொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசு அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை. கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது, பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை என விளக்கமளித்தார். 

மேலும், 2000 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ்நாட்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படுக்கைகள், மருந்து, ஆக்ஸிஜன் போன்றவை சரியாக உள்ளது என்பது உறுதிப்டுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நோய் எதிர்ப்புசக்தி தன்மை குறித்து தமிழ்நாடு முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு நடத்தப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்பதால் நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை இல்லை என்றும் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இன்புளுயென்சா காய்ச்சலுக்கான தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு போடும் பணி விரைவில் துவங்கப்படும் என கூறிய சுகாதாரத்துறை அமைச்சர்,

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கூடுதலாக 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 30 மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள எட்டு மாவட்டங்களிலும் விரைவில் பணி நியமனம் முடிக்கப்படும்’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் படிக்க | தமிழக வேளாண் பட்ஜெட்2023: விவசாயிகளுக்கு திட்டங்களை அள்ளி வீசிய பன்னீர்செல்வம்: முக்கிய அறிவிப்புகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News