திமுகவிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும், தமிழக மக்களுக்காக இயக்கம் ஒன்று பட வேண்டும், வலிமையுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என சசிகலா ஈரோடு மாவட்டம் பவானியில் தொண்டர்களிடையே பேசியுள்ளார். தமிழக மக்களின் உரிமைகளை காத்திடவும், திமுக ஆட்சி அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக்காத்திட சசிகலா ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அந்தியூர் சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். அப்போது, திமுக மூன்றாவது ஆண்டில் பயணித்து வரும் நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியும், பல்வேறு கட்டணங்கள், வரிகளை உயர்த்தி மக்களை வஞ்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி
முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா போராடி பெற்ற காவிரி நதி நீர் பங்கீட்டில் 177.25 டிஎம்சி மாதம் வாரியாக நடுவர் மன்றம் வரையறுத்து தற்போது வரை கர்நாடக தரவேண்டியதை தரவில்லை. திமுக கூட்டணி வைத்திருக்கும் கர்நாடக காங்கிரஸ் தட்டி கேட்குமா? என்றும் கேள்வி எழுப்பிய சசிகலா திமுக நீதிமன்றத்தை அணுகி நமக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்று தரவேண்டும் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் திமுக கட்சிக்காரர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும் இதை செய்தால் சட்ட ஒழுங்கு அமைதியாக இருக்கும். திமுகவினர் அத்துமீறி செல்கின்றனர். அவர்களை அடக்கவேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட சசிகலா தமிழகத்தை காப்பாற்ற மக்கள் கையில் உள்ளது என்றார்.
கோவை, திருப்பூர் ஈரோடு 30லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில் தொழிலுக்கு தேவையான வசதிகளை செய்யாமல், சிங்கப்பூர், மலேசியா என சுற்றுப்பயணம் செய்வதாக தெரிவித்தார். திமுகவிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும், தமிழக மக்களுக்காக இயக்கம் ஒன்று பட வேண்டும், வலிமையுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி அளித்துள்ளார். மதுரை முனிச்சாலையில் ஆக. 20ல் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அதிமுக மாநாடு தொடர்பான ஸ்ட்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில் "கரி கட்டையால் அதிமுக வரலாற்றை சுவரில் எழுதி கட்சியை வளர்த்தோம். மதுரையில் அதிமுக மாநாட்டை தொண்டர்கள் நடத்துகிறார்கள், அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மற்ற கட்சிகள் மாநாட்டுக்கு கூட்டத்தை கூட்டுகிறார்கள், அதிமுக மாநாட்டில் தானாக சேரும் கூட்டம், நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது, அளவு கோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும், தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல முதல்வர் பேசுகிறார். உப்பு தின்பவன் தண்ணீர் குடித்தாக வேண்டும், தவறு இழைத்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும், அமலாக்கத்துறை விசாரணையில் பாகுபாடு காட்டவில்லை, தவறு செய்தவர்களிடம் மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது," என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ