பொள்ளாச்சியின் அதிர்வு.....இதயத்துடிப்பை அதிரவைத்துள்ளது: தமிழிசை!!

பொள்ளாச்சியின் அதிர்வு, இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்!

Updated: Mar 12, 2019, 12:48 PM IST
பொள்ளாச்சியின் அதிர்வு.....இதயத்துடிப்பை அதிரவைத்துள்ளது:  தமிழிசை!!

பொள்ளாச்சியின் அதிர்வு, இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்!

பொள்ளாச்சியின் அதிர்வு, இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது. குற்றவாளிகள் தயவு தாட்சணியமில்லாமல் தண்டிக்கப்படவேண்டும் என பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொள்ளாச்சியின் அதிர்வு..... இதயத்துடிப்பை அதிர்வடையச் செய்கிறது.... குற்றவாளிகள்... தயவு தாட்சணியமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்..பிறக்காத பெண்சிசு கூட கலைக்கப்படக்கூடாது என்றிருக்கும் என் தேசத்தில், எங்கள் பெண் குழந்தைகளின் தேகங்கள் சிதைக்கப்படும்போது எப்படித் தாங்குவது? எரிமலையாய் வெடிப்போம்... அதே நேரத்தில் எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள். போராட்டங்களை விட போராட்டமான அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம். 

அந்தக் கொடுஞ்சம்பவங்களின் மனநிலையிலிருந்து வெள்ளை உள்ள இளம்தளிர்களை மீட்டு, மருந்தாக இருந்து மனக் காயங்களையும், உடல் காயங்களையும் மறக்க வைத்து, பட்டதுன்பம் மறைந்து குதித்தோடி பட்டாம்பூச்சிகளாக பறக்க வைத்து, அதேநேரத்தில் கொத்த வந்தால் கழுகுகளாக மாறிக் குத்திக் குதறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவது என் வேலை" என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.