தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பேரவை -அம்மா சாரிடிபிள் டிரஸ்ட் மூலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது. அந்தவகையில் இன்று மதுரையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ - மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயியாக பிறந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடியார், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் வழங்கி முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார் எனவும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தென் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையான ராக்கெட் ஏவுதள கோரிக்கைக்கு முதல்வர் பச்சை கொடி அசைத்திருப்பது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.