மது, பெட்ரோலைத் தவிர வேறு வழியில் வருவாய் ஈட்ட இயலாத பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்!
கடந்த ஆகஸ்ட் மாத்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் தெரிவித்து வருகிறது.
தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை கவனிக்காமல் வரும் பொதுத்தேர்தலுக்காக பிராச்சாரம் மோற்கொள்ளுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவரும் நிலையில் பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அறிவித்துள்ளார். முன்னதாக ஆந்திர மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான 2 ரூபாய் வரி குறைப்பு செய்தது. ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4% குறைக்கப்படுவதாக அறிவித்தது.
அண்டை மாநிலங்கள் பெட்ரோல் விலையினை குறைக்க முயற்ச்சித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது...
கர்நாடகத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.00 குறைப்பு: செய்தி - அவை அனைத்தும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசுகள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.30 லாபம் ஈட்டினாலும் தமிழகம் வரியைக் குறைக்காது. மது, பெட்ரோலைத் தவிர வேறு வழியில் வருவாய் ஈட்ட துப்பில்லாதது பினாமி அரசு!
— Dr S RAMADOSS (@drramadoss) September 18, 2018
"கர்நாடகத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.00 குறைப்பு: செய்தி - அவை அனைத்தும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசுகள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.30 லாபம் ஈட்டினாலும் தமிழகம் வரியைக் குறைக்காது. மது, பெட்ரோலைத் தவிர வேறு வழியில் வருவாய் ஈட்ட துப்பில்லாதது பினாமி அரசு!" என குறிப்பிட்டுள்ளார்!