ஆறுமுகசாமி ஆணையம் மேல்முறையீட்டு மனு மீது கேவியட் மனு தாக்கல்

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது, தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Last Updated : Apr 11, 2019, 05:38 PM IST
ஆறுமுகசாமி ஆணையம் மேல்முறையீட்டு மனு மீது கேவியட் மனு தாக்கல் title=

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது, தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகாசி ஆணையத்தில்  மருத்துவக்குழு அமைக்காமல் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரிக்கப்படுவதாக கூறி, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 90% விசாரணை முடிந்து விட்டதால், தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 

இதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையில் தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணையில் தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது

Trending News