குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு பின் டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம்

Tasmac New Rules : தீபாவளி பண்டிகை முடிந்ததும் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம் நடக்க இருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 18, 2024, 01:43 PM IST
  • தமிழ்நாடு டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம்
  • குடிமகன்களுக்கு ஹேப்பியான செய்தி வெளியீடு
  • இனி பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டாம்
குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு பின் டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம் title=

தீபாவளி பண்டிகை முடிந்ததும் தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. இந்த மாற்றம் குடிமகன்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கப்போகிறது. அதாவது, இனி குவார்டர், பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டியதில்லை. கியூஆர் கோட் (QR Code) ஸ்கேனர் மூலம் நேரடியாக ஸ்கேன் செய்து உரிய பணத்தை மட்டும் செலுத்தி விரும்பிய மதுபானங்களை குடிமகன்கள் வாங்கலாம். இந்த திட்டத்தை சோதனை முறையில் ராமநாதபுரம் மற்றும் அரணக்கோணம் பகுதிகளில் உள்ள சில கடைகளில் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். 

டாஸ்மாக் செய்யும் மிகப்பெரிய மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் அரசே டாஸ்மாக் மதுக்கடைகள் (TASMAC Billing) மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதில் குவாட்டர், பீர் உள்ளிட்ட பல்வேறு மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு பிராண்டுகளுக்கு ஏற்ப கூடுதலாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் செய்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனால் டாஸ்மாக் விற்பனை ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் அரங்கேறின. பீர், பிராந்தி மற்றும் குவார்டர்களுக்கு கூடுதலாக டாஸ்மாக்கில் பணம் வாங்கப்படுகிறது என்ற சர்ச்சை வெடித்து தமிழ்நாடு அரசுக்கும் இந்த விஷயம் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதனை இப்போது முடிவுக்கு கொண்டு வருகிறது டாஸ்மாக்.

மேலும் படிக்க | சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தங்களை எம்ஜிஆர் என்கிறார்கள்... விஜய்யை டார்கெட் செய்யும் அதிமுக!

டாஸ்மாக் பில்லிங்கில் மாற்றம்

டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேனர்கள் (QR Code Scanner) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் குடிமகன்கள் பணத்தை நேரடியாக அரசுக்கு செலுத்தி, மது வகைகளை வாங்கிச் செல்ல முடியும். இதுகுறித்து டாஸ்மாக் தரப்பில் கூறும்போது, " விற்பனை முறைகேடுகள் மற்றும் ஊழல்களை தவிர்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் QR Code Scanner அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. யாருக்கும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நெருக்கடி இருக்காது. மேலும், டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். இப்போது சோதனை முறையில் அரக்கோணம், ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் 14 கடைகளில் QR Code Scanner வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வரத்தை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாட்டில்களை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளிக்குப் பிறகு நடைமுறை

தீபாவளி நெருங்கிவிட்டதால் அனைத்து கடைகளிலும் உடனே க்யூஆர் கோடு ஸ்கேனர் மற்றும் பில்லிங் மாற்றங்களை அமல்படுத்துவது கடினம். ஊழியர்களுக்கு புதிய பில்லிங் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. அவர்களுக்கும் பில் கொடுப்பது, வரவுகளை  அப்டேட் செய்வது குறித்து பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் பில்லிங் முறையில் செய்யப்படும் புதிய மாற்றம் நவம்பர் மாதம் முதல் படிப்படியாக அமலாகும். தினசரி 2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும், கூட்ட நெரிசல் மிக்க கடைகளில் கூடுதல் பில்லிங் கவுண்டர்களை ஓபன் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கிரீன் சிக்னல்

டாஸ்மாக் துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அவர் சிறை செல்வதற்கு முன்பே டாஸ்மாக்கில் பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இப்போது சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அவர், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் க்யூஆர் கோடு ஸ்கேனர் மூலம் பணம் செலுத்தும் திட்டத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டுமொத்தமாக பில்லிங் முறையே மாற இருக்கிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் கடைக்கு வரும் பாட்டில்கள் எண்ணிக்கை, இருப்பு, விற்பனை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தினசரி அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் இனி அப்டேட் செய்ய வேண்டும். இதை தான் குடிமகன்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News