சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியம் ரத்து: TN Govt

சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தை ரத்து செய்தது தமிழக அரசு அறிவிப்பு..!

Last Updated : Jul 10, 2020, 05:24 PM IST
சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியம் ரத்து: TN Govt title=

சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தை ரத்து செய்தது தமிழக அரசு அறிவிப்பு..!

சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தை தமிழக அரசு ரத்து செய்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் மதிப்பு ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் விளைவாக, MP-களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டாண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சில மாதங்களுக்கு அறிவி்த்திருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

READ | ICSE 10-12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020: cisce.org; results.cisce.org

இந்தியாவில் மார்ச் மாதத்தில் பரவ துவங்கிய கொரோனா இன்றுவரை மொத்தம் 7,93,802 கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 26,506 பேருக்கு கொரோனா பாதிப்புகள் மற்றும் 475 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது. 

மொத்தம் 1,26,581 பாதிப்புகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை இதுவரை 1,765 ஆக உள்ளது. நோயிலிருந்து மீண்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 78,161 ஆகும். மாநிலத்தில் செயலில் உள்ளநோயாளிகளின் எண்ணிக்கை 46,655 ஆகும்.

Trending News