நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி

தானியங்கி மது இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு போகாதா அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை வெளியிடுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 4, 2023, 07:52 AM IST
  • தானியங்கி மது விற்பனை இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது
  • நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் இது குறித்து கேள்வி எழுப்புகிறார்
  • நாடாளுமன்றத்தில் மது விலக்கு குறித்து கேள்வி எழுப்ப தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி
நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி title=

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

கடந்த சில தினங்களுக்கு முன்பு தானியங்கி மது விற்பனை இயந்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை கடையை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாலில் உள்ள கடைகளை பொறுத்தவரை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும் தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது ATM உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்து கொள்ளலாம் என்ற தவறான செய்தியை பரப்புகின்றனர்.

மேலும் படிக்க | அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துவாரா?

எந்த மாநிலத்திலும் இது போன்ற தானியங்கி இயந்திரம் இல்லையா? என கேள்வி எழுப்பிய அவர், 29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து செய்தி வெளியிடுகிறார். 2019-ல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. டாஸ்மாக் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. அதை கடைகளில் பயன்படுத்துகிறார்கள். எதிர்கட்சி தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வரலாம் என வலியுறுத்துகிறார்களா?. அதற்கு தைரியமில்லை இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள்.

பெங்களுரில் மதுகடைகள் மூடப்படவில்லை

அதிமுக அரசாங்கத்தில் தொடங்கப்பட்ட கடைகள் அறிவிப்பு இல்லாமலேயே 90 கடைகள் மேல் மூடப்பட்டுள்ளது. சட்டசபையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இல்லை. கொரோனா காலத்தில் பெங்களூரில் மது கடைகள் ஒரு நாள் கூட மூடவில்லை. இந்த மாலில் போடப்பட்டுள்ள machine மது விற்பனை செய்யும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் அமைக்கவில்லை.

அரசு எடுத்த கடும் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம். டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து அரசை நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் சமூக வலைத்தளம் என யாராக இருந்தாலும் சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

மேலும் படிக்க | மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: தங்க பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News