கரூரில் 100-நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அரசு விழாவிற்கு அழைத்து சென்றதை கண்டித்து, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-
அரசு விழா என்ற பெயரில் மாணவர்களை வதைத்த குதிரை பேர அரசு இப்போது 100நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கரூரில் கூட்டி செல்கிறது. pic.twitter.com/6e8RBbO2W7
— M.K.Stalin (@mkstalin) October 4, 2017
"அரசு விழா என்ற பெயரில் மாணவர்களை வதைத்த குதிரை பேர அரசு, இப்போது 100-நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கரூரில் கூட்டி செல்கிறது."
இவ்விழாவிற்கு அழைப்பு விடுப்பது தலைமை செயலாளர்.இதுபோன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் பதில் அளிக்கும் காலம் விரைவில் வரும்.
— M.K.Stalin (@mkstalin) October 4, 2017
"இவ்விழாவிற்கு அழைப்பு விடுப்பது தலைமை செயலாளர். இதுபோன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் பதில் அளிக்கும் காலம் விரைவில் வரும்."
என பதிவிட்டுள்ளார்