ஒரே நபருடன் உறவில் இருந்த தாயும், மகளும்... கண்டித்த கணவன் கொடூர கொலை!

தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் தனது மனைவி, மகள், அவர்களின் காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2022, 03:49 PM IST
  • இந்த கொலை தொடர்பாக மூன்று பேர் கொலை.
  • பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் ஊற்றி அவரை கொலை செய்துள்ளனர்.
ஒரே நபருடன் உறவில் இருந்த தாயும், மகளும்... கண்டித்த கணவன் கொடூர கொலை! title=

தூத்துக்குடி மாவட்டம் அச்சங்குளத்தில் உள்ள தனியார் காற்றாலைக்கு செல்லும் சாலை அருகே உள்ள கிடங்கில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினர். 

விசாரணையில், உயிரிழந்தவர் காமநாயக்கன்பட்டி அருகே குருவி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என தெரியவந்தது. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல அதிர்ச்சிக்கர தகவல்கள் கிடைத்துள்ளது. 

42 வயதான ராஜாவுக்கு, இளவரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். ராஜாவின் வீட்டருகே கருப்பசாமி (எ) கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கார்த்திக்கும், ராஜாவின் மனைவி இளவரசியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பெண்ணுக்கு 50 தையல்... இந்த வகை நாயிடம் கவனமாக இருங்க!

அதுமட்டுமில்லாமல், கார்த்திக்கும், ராஜாவின் 16 வயது மூத்த மகளும் காதலித்து வந்துள்ளனர். இந்த இரண்டு காதல் விஷயமும் ராஜாவுக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்தது. இதனால், இரண்டு பேரையும் ராஜா கண்டித்துள்ளார். எனவே, ராஜாவை கொலை செய்ய கார்த்திக் உடன் சேர்ந்து இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

நேற்று இரவு ராஜா தூங்கியதும். அவரது மூத்த மகள், தனது காதலன் கார்த்திக்கு, 'தந்தை உறங்கி விட்டார், வீட்டுக்கு வா' என செல்போனில் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து, கார்த்திக்கும் ராஜாவின் வீட்டுக்கு வந்துள்ளார். 

பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ராஜா மீது மிளகா பொடி தூவி, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் உடலை கார்த்திக் தனது காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விசாரணையில் தெரியவந்துள்ளது.  மூன்று பேரிடமும் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.  மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஞானசேகரனை, கார்த்திக் கார் ஏற்றிக் கொள்ள முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளனர். தொடர்ந்து மூவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | குழந்தை திருமணத்திற்கு ஆதரவு... தீட்சிதர்கள் அதிரடி கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News