இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக BJP குரல்கொடுக்கும்: தமிழிசை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பதுக்கல்காரர்களுக்கு எதிரானது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2018, 02:26 PM IST
இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக BJP குரல்கொடுக்கும்: தமிழிசை title=

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பதுக்கல்காரர்களுக்கு எதிரானது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்...! 

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ATM வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர்.   

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களைச் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியபோது, ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை பணத்தைப் பதுக்கி வைத்தவர்களுக்கு எதிராக எடுத்த நவடிக்கை. யாரும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. இந்த நடவடிக்கை பணக்காரர்களுக்கானது அல்ல' இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக, பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று கூறினார்.

அவரிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டதற்கு, ‘எதிர்கட்சிகள் ஒன்றிணைவதால் மோடி தலைமையிலான ஆட்சி ஆட்டம் காணாது. அவருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது' என்று பதிலளித்தார்.

 

Trending News