கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழப்பு - 26,981 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏறத்தாழ 26 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 19, 2022, 09:36 PM IST
கொரோனா; தமிழகத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழப்பு - 26,981 பேர் பாதிப்பு  title=

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் மாலை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழை மாலை வெளியிடப்பட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,981 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 என தெரிவித்துள்ளது

ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ

இதில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 6 ஆயிரத்து 501 பேர். தமிழகத்தின் உயிர்பலி இதுவரை 37,073 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 8007 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை

கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 325 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அரசு சார்பில் மட்டும் 69 மையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளது. எஞ்சியவை தனியார் மையங்கள் எனக் கூறியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மக்களிடையே மீண்டும் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News