தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மேன்டூஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் - ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்
புயலை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் சந்திப்பு குமார் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் சென்னை அடையாறில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
படகுகள் மரம் வெட்டும் சாதனங்கள் கயிறு உள்ளிட்ட மீட்புக் பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தகவல் சொன்னவுடன் 10 நிமிடத்தில் அங்கு செல்ல தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் சந்திப் குமார் கூறியுள்ளார்.
அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 121 பன்னோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்கின்றன என அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | 'அவர் இருந்தால் பாஜக அவ்வளவுதான்...' கட்சிக்கு டாட்டா காட்டிய திருச்சி சூர்யா!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ