தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த மாவட்டங்களில் அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் (Local Body Elections) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 74.37 சதவீதம் வாக்கு பதிவானது.
ALSO READ | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது
விழுப்புரத்தில் அதிகபட்சமாக 81.36% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராணிபேட்டையில் 81 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 80% வாக்குகளும் பதிவாகி உள்ளன. செங்கல்பட்டில் 67%, கள்ளக்குறிச்சி 72%, வேலூர் 67%, திருப்பத்தூர் 78%, திருநெல்வேலி 69%, தென்காசி 74% வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 12,376 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 6,652 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. அதே சமயம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கா் ஆகிய 4 ஒன்றியங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. ,மேலும் பாதுகாப்புப் பணியில் 1,940 காவலா்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான 172 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் கூடுதல் காவலா்கள் பணியில் உள்ளனர். மேலும் தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடிகளில் 4,521 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய விவரம்:
* களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 783 பதவிகளுக்கு 2,516 பேர் போட்டி.
* உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக ஆகிய கட்சி தனித்து போட்டியிடுகிறது.
* 4 ஒன்றியங்களில் 567 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
* 4 ஒன்றியங்களில் 1,60,722 ஆண் வாக்காளர்களும், 1,65,091 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தமாக 3,25,826 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
ALSO READ | உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR