தமிழக பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிப்பு: சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகள் படையெடுப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது .

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 2, 2024, 08:21 PM IST
  • ஜூன் 10ஆம் தேதிக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உத்தரவு.
  • சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகளின் படையெடுப்பு.
தமிழக பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிப்பு: சுற்றுலா மாவட்டங்களுக்கு பயணிகள் படையெடுப்பு title=

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அதிகாலை முதலே குவிந்த சுற்றுலாப் பயணிகள் மாடங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் மே மாதம் கோடை விடுமுறை முடிந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது தற்போது ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. 

மேலும் படிக்க | Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் காலை முதலே குவிந்த சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசித்தனர் குறிப்பாக மலர் காட்சி திடலில் மாடங்களில் வைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் லட்சத்திற்கும் மேலான மலர் ரகங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 

இது மட்டுமல்லாமல் கண்ணாடி மாளிகை ஜப்பான் பூங்கா இத்தாலியன் பூங்கா போன்ற பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர் மலர் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட அலங்கார வடிவமைப்புகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தாலும் பூங்காவில் பல இடங்களில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவரந்துள்ளன.

பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்தோடு வருகை புரிந்திருந்த மாணவிகள் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்த பின்பு ஒரே இடத்தில் இவ்வளவு ரக மலர்களை நாங்கள் பார்த்ததில்லை எனவும் மலர்கண்காட்சி பார்க்க முடியவில்லை ஆனால் தற்போது பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்திருப்பதாகவும் எங்கு நிலவும் காலநிலை பூங்கா மிக அழகாக உள்ளது என கூறிய மாணவிகள் பள்ளிகள் தொடர் விடுமுறை நீட்டிப்பால் உதகைக்கு செல்ல திட்டமிட்டதாக தெரிவித்தனர். மேலும் மலர் மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர்களின் முன்பு நின்று ஸ்டைலாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க | TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? வெற்றி வாய்ப்பு யாருக்கு? முழு விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News