தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2022, 12:31 PM IST
  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.
  • சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல் title=

TN Weather Forecast: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

18.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

21.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

22.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க | காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்... மூவர் சஸ்பெண்ட் - பாத யாத்திரை பரிதாபங்கள்

சென்னையை பொறுத்தவரை, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பந்தலூர் (நீலகிரி) தலா 3, தாம்பரம் (செங்கல்பட்டு), மாதவரம் AWS (திருவள்ளூர்) தலா 2, கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), பொன்னை அணை (வேலூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), திருப்போரூர் (செங்கல்பட்டு), தேவாலா (நீலகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), வூட் பிரையர் எஸ்டேட் ( நீலகிரி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:  mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும்.

 பா. செந்தாமரை கண்ணன்
 இயக்குனர்
 தென் மண்டல தலைவருக்காக
 மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை.

மேலும் படிக்க | சேவையின் அடையாளம்தான் மோடியின் வாழ்க்கை - நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அமித் ஷா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News