போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட: ஐகோர்ட் உத்தரவு!!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Last Updated : Jan 5, 2018, 05:05 PM IST
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட: ஐகோர்ட் உத்தரவு!! title=

தமிழகம் முழுக்க போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்பவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால், வேறு பணிக்கு செல்லலாம். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

 

 

Trending News