அமுமுகவுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

அமுமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரேசின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

Last Updated : Mar 29, 2019, 07:48 AM IST
அமுமுகவுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கிய தேர்தல் ஆணையம்! title=

அமுமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரேசின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

மக்களவை தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் அமமுக சார்பில் தொப்பி அல்லது குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரே பொதுசின்னம் வழங்குவதை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரேசின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Trending News