ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து நீர்நிலைகள் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், காவரியில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,500 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.